Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் கைது

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:30 GMT, Sep 2, 2017 | Published: 05:29 GMT, Sep 2, 2017 |
0 Comments
1246
icon_com
This post was written by : Elakkiya
201709012053378922_Wayne-Rooney-charged-with-drink-driving-offence-following_SECVPF

மதுபோதையில் வாகனம் ஓடியதாக இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் வேய்ன் ரூனே கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விம்ஸ்லோ நகரின் ஆல்ட்ரின்சம் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவர் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக காரை செலுத்தியதாகவும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வேய்ன் ரூனே கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்து கால்பந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தனது சொந்த கழக அணியான எவர்ட்டன் அணியில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

வேய்ன் ரூனே  சர்வதேச கால்பந்து போட்டிகளில்  இங்கிலாந்து அணிக்காக 119 போட்டிகளில் விளையாடி 53 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg