Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திருப்பதி சென்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

In இந்தியா
Updated: 05:39 GMT, Sep 2, 2017 | Published: 05:36 GMT, Sep 2, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Vithushagan
201709021048023132_president-offer-prayers-to-lord-venkateswara_SECVPF (1)

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் இன்று (சனிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு நேற்று வருகை தந்தார். திருப்பதி வந்த குடியரசு தலைவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.

அதன்பின்னர், திருப்பதியில் உள்ள அரசு மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு விருந்தளித்தார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, திருப்பதி கோயிலுக்கு வந்த ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் வழங்கி, பட்டு சால்வை போர்த்தினர். லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி கோயிலில் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினர் சுமார் அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்தனர்.

குடியரசு தலைவருடன் ஆந்திர மாநில ஆளுனர் நரசிம்மன் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் சென்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg