Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பிய குடிமக்களுக்கு உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்: லண்டன் மேயர்

In
Published: 06:18 GMT, Sep 2, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Risha

பிரித்தானியாவில் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு பிரெக்சிற்றின் பின்னர், அங்கு தங்கியிருப்பது தொடர்பில் உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், லண்டனுக்கான சுற்றுலாத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான வாக்குறுதியானது, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை ஒரு சிறந்த சூழலில் முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பிரெக்சிற் ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையை தொடர்ந்து அணுகுவது தொடர்பில் பிரதமர் தெரேசா மே-யை வலியுறுத்தினார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றித்திலிருந்தும், ஒற்றை சந்தையைவிட்டும் முழுமையாக வெளியேறுவதற்கான முயற்சியில் பிரதமர் மே ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg