Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எஸ்.பீக்கு சவால் விடுக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர்

In இலங்கை
Published: 06:36 GMT, Sep 2, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Arul Jesu
jagath-kumara-samurdhi-

அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தாம் தொடர்பில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு வாரத்தில் நிருபிக்காவிடின் நீதிமன்றத்தை நாட போவதாக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தான் க.பொ.த.உயர்தர பரிட்சையில் சித்தியடையவில்லை என தெரிவித்திருக்கும், அமைச்சருக்கு சித்தியடைந்தமைக்கான சான்றிதழை காண்பிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜகத் குமார படிபறிவற்றவர் என வெளிபடையாக தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜகத் குமார மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

மேலும் தான் உயர்தர பரிட்சையில் சித்தியடையாமையை நிருபிக்க தவறினால் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தனது அமைச்சு பதவியை விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

அதேபோல் தன்னை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக 500 இலட்சத்தை நட்ட ஈடாக கோரி வழக்கு தாக்கல் செய்ய தயார் எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg