Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சச்சினின் ஜெர்சியால் சர்துல் தாகூருக்கு வந்த சர்ச்சை

In கிாிக்கட்
Updated: 07:34 GMT, Sep 2, 2017 | Published: 07:30 GMT, Sep 2, 2017 |
0 Comments
1724
icon_com
This post was written by : Elakkiya
621222-ttttttt

இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளரும் அறிமுக வீரருமாகிய சர்துல் தாகூர் தொடர்பில் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

கடந்த விழயாக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணியுடனனான நான்காவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய தாகூர் ஏழு ஓவர்களுக்கு பந்து வீசி 26 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். எனினும் அவருடைய செயற்திறன் இந்திய இரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதாக தாகூரின் இலக்கம் ’10’ பொறிக்கப்பட்ட ஜெர்சியே சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதே இலக்க ஜெர்சி இந்திய அணியின் கிரிக்கட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருடையது என்பதே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

டென்டுல்கர் இரசிகர்களின் உணர்வுகளை பற்றவைத்துள்ள இந்த விவகாரத்தில் தாகூரை பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் டென்டுல்கரின் நெருங்கிய நண்பரான ஹர்பஜன்சிங், ‘ அந்த ஜெர்சியை அணிவதில் என்ன தவறு? டென்டுல்கரை பார்த்து வளர்ந்த ஒரு இளம் வீரராக அவர் இருக்கலாம். இலக்கம் ’10’ பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது அவருடைய கனவாக இருக்கலாம். அதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். இது சச்சினை பின்பற்றும் நடைமுறையாக இருக்கலாம். அல்லது அவரடைய அதிஷ்ட எண்ணாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அனைவரும் உணர்ச்சிகளை கொண்டுள்ளனர். சச்சினை நாம் மதிக்கிறோம். அவர் விளையாடும் வரை அந்த ஜெர்சியை யாரும் அணியவில்லை. அந்த ஜெர்சி எப்போதும் மனதிலிருக்கும். வேறு ஒருவர் அணிந்து கொள்வதால் அந்த மதிப்பு எப்போதும் கீழே இறங்காது. இந்த ஜெர்சி இலக்கத்தை ஓய்வு பெற செய்வதும் தொடர்ந்து பணியில் கொண்டுசெல்வதும் சச்சினுக்கு அர்பணிப்பதும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் முடிவிலுள்ளது. ஜெர்சியை வேறு ஒருவர் அணிவது தொடர்பில் சச்சினிடன் பேசினாலும் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது”என்றும் ஹர்பஜன்சிங் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, சச்சினின் ஜெர்சியை அணிவதை தனிப்பட்ட முறையில் தவறு என்று தான் பார்க்கவில்லை என்று கூறும் ஹர்பஜன், சச்சின் போலவே கிரிக்கட்டில் இளைஞர்களை நன்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சர்துலால் விமர்சிக்கப்படுவது நியாயமற்றது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg