Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மனம்தளர்ந்துள்ள மலிங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு?

In கிாிக்கட்
Updated: 08:28 GMT, Sep 2, 2017 | Published: 08:27 GMT, Sep 2, 2017 |
0 Comments
3496
icon_com
This post was written by : Elakkiya
000_RP5WK

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்களை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க தற்போது நடைபெற்றுவரும் இந்திய அணியுடனான தொடருடன் ஓய்வு பெறலாம் என்ற விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

தொடர்ச்சியாக உடற்தகுதி பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால் இந்த தொடருடன் ஓய்வுபெறலாம் என்று கூறப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் 300 ஆவது விக்கெட்டை வீழ்த்திய மலிங்க முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், சனத் ஜயசூரிய, பிரட் லீ, கிளென் மக் கிராத் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

இது சிறிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும் பத்து ஓவர்களில் பந்து வீசி 82 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பற்றியிருந்தார் என்பது சற்று பின்னடைவாகவே கருதமுடியும்.

இந்நிலையில் இந்திய அணியுடனான கிரிக்கட் தொடரின் முடிவில் கிரிக்கட் எதிர்காலம் குறித்து மதிப்பிடுவதாக மலிங்க உறுதியளித்துள்ளார்.

இதன்பிரகாரம் தொடர்ச்சியான வீழ்ச்சிகளால் மனம்தளர்ந்துபோயுள்ள மலிங்க இந்திய தொடரின் நிறைவில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg