Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் அதிக எண்ணிக்கையான பயங்கரவாதிகள்: EU அதிகாரி

In
Updated: 08:15 GMT, Sep 2, 2017 | Published: 08:15 GMT, Sep 2, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Risha
EU1

டக்ஃபிரி பயங்கரவாதிகளின் உறைவிடமாக பிரித்தானியா திகழ்வதாகவும், இது பிரித்தானியாவிற்கும், பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலாகக் காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரியொருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான கில்லஸ் டி கெர்ல்சோவ், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் குறிப்பிட்டிருந்த அவர், ”ஸ்பெயின் நகரங்களான பார்சிலானோ மற்றும் கேம்பிரில்ஸ் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை போன்று மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் மேலும் பல தாக்குதல்களை சந்திக்க போகிறோம். ஐரோப்பிய நாடுகளில், பிரித்தானியாவிலேயே அதிக எண்ணிக்கையான பயங்கரவாதிகள் காணப்படுகின்றனர்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg