Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெக்சாஸ் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராணி இரங்கல்

In
Updated: 09:36 GMT, Sep 2, 2017 | Published: 09:36 GMT, Sep 2, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Risha
brit

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய ஹார்வே சூறாவளியினால் உயிரிழந்தகவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய மகாராணி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வெளியிட்ட செய்தியின் மூலம், அவர் மக்களுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தை புரட்டி எடுத்த சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால், பல்லாயிரக் கணக்கானோர் தங்களது வீடுகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் மகாராணி குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாஸை உலுக்கிய பேரழிவில் 39 பேர் உயிரிழந்ததுடன், 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண உதவிகளை கோரி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg