Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடகர் தீபக்கின் கனவை நனவாக்கிய விஜய்!

In சினிமா
Published: 12:05 GMT, Sep 2, 2017 |
0 Comments
1420
This post was written by : Surenth
Deebak

விஜய்யின் திரைப்பட பாடல்கள் மூலமே தான் அறிமுகமாக்கியுள்ளதாக சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டொப் 12 போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட பாடகர் தீபக் தெரிவித்துள்ளார்.

‘மெர்சல்’ படத்தில் அறிமுகப்பாடலாக இடம்பெற்றிருக்கும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டொப் 12 போட்டியாளராக தேர்வானேன், அதுவே பாடகனாக வெளியுலகுக்கு என்னை அறிமுகமாக்கிய முதல் மேடை. பின்னர் விஜய் ஆண்டனி என்னை திரையுலகிற்கு பாடகராக அறிமுகப்படுத்தினார்.

2014 ஆம் ஆண்டில் தளபதி விஜய்யின் ‘ஜில்லா’ திரைப்படத்தின் தீம் பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வாரத்திற்குள்ளாகவே அஜித்தின் ‘வீரம்‘ திரைப்படத்தின் தீம் பாடலையும் பாடினேன். அதன் பிறகுதான் தீபக் என்ற பாடகரை பலருக்கு தெரிய ஆரம்பித்தது. இதுவரை 60 திரைப்படங்களுக்கு மேல், 150 பாடல்கள் வரை பாடியுள்ளேன்.

தற்போது மீண்டும் விஜய்க்கு, ‘மெர்சல்’பட அறிமுக பாடலை பாடும் வாய்ப்பை பெற்றேன். ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு முறையாவது பாடவேண்டும் என்பது கனவு. அவரது இசையில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை பாடியதன் மூலம் என் கனவு நிறைவேறி இருக்கிறது. ஒரு பாடகன் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்த பாடலை அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த பெருமைக்கு காரணமான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் அட்லி, விஜய் அண்ணன் அனைவருக்கும் நன்றி”. என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg