Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோட்பாடு உயிருடன் உள்ளது: இராணுவப் பேச்சாளர்

In இலங்கை
Published: 12:13 GMT, Sep 2, 2017 |
0 Comments
2160
This post was written by : Ravivarman
colkdupress_05182303158_5213590_08022017_KAA_CMY

விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோட்பாடு இன்னமும் உயிருடன் காணப்படுகின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே வெளிக்காட்டுகின்றது.

வெளிநாடுகளில் உள்ள பல தொடர்புகளின் மூலம் இன்னமும் இவர்கள் வலைப்பின்னலில் செயற்பட்டுக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பான போர்க்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் முற்றாக மறுக்கின்றது” எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg