Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தலைவர்களுக்குள் முரண்பாடு கூடாது: பிரதி தவிசாளர்

In இலங்கை
Updated: 13:35 GMT, Sep 2, 2017 | Published: 13:35 GMT, Sep 2, 2017 |
0 Comments
1316
This post was written by : Ravivarman

அரசியல் யாப்பு 20வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடான கருத்துக்களுக்கு இடமிருக்க கூடாது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்  இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கருவப்பன்கேணி நாகதம்பிரான் ஆலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பிரதான வாயிலை கையளிக்கும் நிகழ்வின் பின் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை நிராகரிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

குறிப்பாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் வேண்டும் என குரல் எழுப்புகின்ற நாம் ஒரு போதும் இருக்கின்ற அதிகாரத்தை இழக்க முடியாது. நாடாளுமன்றத்திலும் சரி மாகாண சபைகளிலும் சரி அதனை நிராகரிக்க வேண்டும்.

இதே திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் முன் வைத்திருந்தால் என்ன நிலைப்பாட்டை நாம் எடுத்திருப்போமோ அதே நிலைப்பாட்டை தான் இப்போதைக்கும் எடுக்க வேண்டும் அதனை தான் தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

அரசியல் யாப்பு 20 ஆவது திருத்த சட்ட வரைபுக்கு முன்பு மாகாண சபைகளின் கருத்துக்களை பெற்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.

மாகாண சபைகளின் அங்கீகாரத்துடன் தான் அரசியல் யாப்பு 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காட்ட அரசு முற்படுகின்றது” என பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg