Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொதுமயானம் சிரமதானத்தின் மூலம் துப்புரவு

In இலங்கை
Published: 13:44 GMT, Sep 2, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman
20170901_082429

துறைநீலாவணை பொது மயானம் பிரதேசத்தின் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பொதுமக்களினால் துப்பரவு செய்யப்பட்டது.

சுமார் 1500 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தத் துப்புரவாக்கல் பணியில் பங்குபற்றினார்கள். பற்றைக்காடுகள் வளர்ந்து கல்லறைகளையும், புதைகுழிகளையும் மூடியிருந்தன.

மயானம் காடுமண்டிக் கிடந்ததால், இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய வரும் பொதுமக்களுக்கு பாரிய இடைஞ்சலாக இருந்து வந்தது.

இதனைக் கருத்திற்கொண்டே இந்த சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்ததாக துறைநீலாவணை கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளர்களான தி. கோகுலராஜ், வ. கனகசபை ஆகியோர் தெரிவித்தனர்.

20170901_090212 20170901_090156 20170901_082354 20170901_082121

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg