Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜகத் ஜெயசூரியவை அரசு கைவிடாது: சஜித் பிரேமதாஸ

In இலங்கை
Published: 16:32 GMT, Sep 2, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Ravivarman
sajith_premadasa

சர்வதேச மனித உரிமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குற்றமற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது இராணுவ வீரர்கள் தொடர்பில் எவராவது குற்றம் சுமத்தினால் நிபந்தனைகள் இன்றி இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

யுத்தம் இடம்பெற்றபோது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனுடன் கையொப்பமிட்ட உடன்படிக்கையினால் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இந்தக் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது” என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg