Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை

In இந்தியா
Updated: 06:10 GMT, Sep 3, 2017 | Published: 06:09 GMT, Sep 3, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Kemasiya
sdfwscfws

2018-2019ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகள் மூடப்படவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுத் தலைவர் அனில் டி.சகாஷ்ரபுதே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 10 ஆயிரத்து 363 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. குறிப்பிட்ட சில கல்லூரிகளில் கடந்த ஐந்து வருடங்களாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதன் காரணமாக 800கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு மூடப்படும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அதற்கு அருகில் உள்ள ஏனைய கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்களென்றும், பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் வெற்றிடமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கர்நாடகத்தில் மட்டும் 2017-2018ஆம் ஆண்டில் 29 ஆயிரம் பொறியியல் பீடத்திற்கான இடங்கள் வெற்றிடமாக இருந்ததாகவும் கர்நாடக தொழில்நுட்ப கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்திற்கு ஏராளமான மனுக்கள் வந்துள்ளது, அதுகுறித்து உரிய பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

அத்தோடு 800 கல்லூரிகளை மூடும் பட்சத்தில் மாணவர்களின் நலன் பாதிக்காமல் இருக்க, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுத் தலைவர் அனில் டி.சகாஷ்ரபுதே கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg