Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜாம்பவானையும் தோற்கடித்தார் ரொனால்டோ!

In உதைப்பந்தாட்டம்
Published: 06:57 GMT, Sep 3, 2017 |
0 Comments
1376
icon_com
This post was written by : Puvanes
ronaldo001

சர்வதேச போட்டிகளில் அதி கூடிய கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருந்த பிரேசில் வீரர் பீலேவை, பின்தள்ளி ரொனால்டோ 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலககிண்ணத் தொடருக்கான தகுதிப் போட்டிகள் தற்போது, போர்த்துக்கல் – போர்டோவில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற பி பிரிவு போட்டியில், போர்த்துக்கல் அணி, பேரோ தீவு அணியுடன் மோதி, 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் போர்த்துக்கல் நாட்டின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மேலும், இதுவரை 144 ஆவது போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ, மொத்தமாக 78 கோல்களை அடித்துள்ளதோடு, சர்வதேச தரப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருந்த பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவானான பீலேவை ரொனால்டோ பின்தள்ளியுள்ளார்.

அதேபோன்று சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த ஐரோப்பிய வீரர்களின் பட்டியலிலும் ரொனால்டோ 2 ஆவது இடத்தினை தன் வசப்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg