Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அடித்தால் ஆறும், நான்கும் மட்டுமே! – இராட்சத வீரர் கொடுத்த அதிர்ச்சி

In கிாிக்கட்
Updated: 09:07 GMT, Sep 3, 2017 | Published: 09:07 GMT, Sep 3, 2017 |
0 Comments
9774
icon_com
This post was written by : Puvanes
westindies001

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணியிடம், செயின்ட்லூசியா அணி தோல்வியடைந்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படாஸ் 20 ஓவர்களில் 195 ஓட்டங்களைக் குவித்தது. டுவானே ஸ்மித் அதிரடியாக ஆடி பார்படாஸ் அணிக்காக 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய செயின்ட்லூசியா அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹீம் கார்ன்வால் அதிரடி ஆட்டத்தினைக் காண்பித்தார்.

44 பந்துகளுக்கு ஆறு, 6 ஓட்டங்களும், ஏழு, 4 ஓட்டங்களும் அடங்கலாக 78 ஓட்டங்களைக் குவித்து எதிரணியைக் கலங்கடித்துக் கொண்டு இருந்தார் ரஹீம் கார்ன்வால்.

இடை நடுவில் ரஹீம் கார்ன்வால் காயம் காரணமாக போட்டியில் இருந்து செல்வதாக அறிவித்தார். அவரது இந்த அதிர்ச்சி முடிவினால் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 29 ஓட்டங்களில் செயின்ட்லூசியா தோல்வியடைந்தது.

எனினும், ரஹீம் கார்ன்வால் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக வில்லை எனவும், அவரால் ஓடி ஓட்டங்களைப் பெற முடியவில்லை என்பதாலேயே போட்டியில் இருந்து பாதியில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 24 வயதான ரஹீம் கார்ன்வால், 143 கிலோ கிராம் உடல் எடையைக் கொண்ட உலகிலேயே அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg