Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் தொடர் மின் தடை: பொதுமக்கள் பாதிப்பு!

In இலங்கை
Updated: 11:04 GMT, Sep 3, 2017 | Published: 11:04 GMT, Sep 3, 2017 |
0 Comments
1326
This post was written by : Ravivarman

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுவதாகவும், இதனால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் குறித்த பிரச்சினை காணப்பட்ட போதும், பின்னர் சற்று குறைவடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் மின் தடை ஏற்படுகின்றது.

இதனால் மின் பாவனையாளர்களின் பெறுமதி வாய்ந்த மின் உபகரணங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக அடிக்கடி மின் தடை ஏற்படுகின்றமை தொடர்பில் பாவனையாளர்கள் மன்னார் மின்சார சபைக்கு தொடர்பை ஏற்படுத்தினால் உரிய பதில் வழங்குவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே தொடர் மின் தடைக்கான காரணத்தை அறிந்து சீர் செய்ய மன்னார் மின் அத்தியட்சகர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg