Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டு விஜயம்

In இலங்கை
Published: 11:16 GMT, Sep 3, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Varshini
tilak marappana

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள திலக் மாரப்பன, தனது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது விஜயத்தை ஆரம்பிக்கவுள்ள திலக் மாரப்பன, பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையில் புரையோடிக் காணப்படும் மீனவர் பிரச்சினை குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, வர்த்தக செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, கடந்த வாரம் 76 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg