Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏவுகணைப் பயிற்சியில் தென்கொரியா

In உலகம்
Published: 03:58 GMT, Sep 4, 2017 |
0 Comments
1366
icon_com
This post was written by : Suganthini

வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தென்கொரிய விமானப் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று (திங்கட்கிழமை)      காலை முதல் ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் நீண்டதூர ஏவுகணைப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என தென்கொரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நேற்று நடத்தியுள்ளது. ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டுப் பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

இந்த அணுவாயுதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் வடகொரியா அறிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவின் ஏவுகணைப் பயற்சி அமைந்துள்ளது எனவும் தென்கொரிய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இன்றைய பயிற்சி, தென்கொரியாவால் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கொரியாவிலுள்ள அமெரிக்கப் படையினருடன் இணைந்து மேலதிக பயிற்சியில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருவதாகவும் தென்கொரிய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg