Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கோஹ்லியின் மிரட்டலால் வீழ்ந்தது இலங்கை! – வரலாற்றில் இது முதல் தோல்வி

In கிாிக்கட்
Published: 04:28 GMT, Sep 4, 2017 |
0 Comments
2914
icon_com
This post was written by : Puvanes

இலங்கை எதிர் இந்தியா மோதிக்கொண்ட 5 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 5 – 0 என்ற கணக்கில் முழுத் தொடரையும் கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை சார்பில் திரிமான்னே 67 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 55 ஓட்டங்களையும் தரங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணியில் புவனேஷ்வர குமார் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து, 239 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றனர்.

எனினும் அதிரடி கலந்த நிதானத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணிக்காக ஜாதவும் சிறப்பாக செயற்பட்டு 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார் அதன் படி இந்திய அணி 6 விக்கெட்டுகளால் இலங்கையை வெற்றி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதேவேளை, இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் 5 – 0 என வீழ்ச்சியடைந்தது இதுவே முதற் தடவை. இது வரையிலும் இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் இவ்வாறான வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg