Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மைத்திரி கையில்: மனோ

In இலங்கை
Published: 06:28 GMT, Sep 4, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Anojkiyan

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“முதற்தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கான தனித்துவ அடையாளங்கள் காப்பாற்றப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளமும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் உணர்வுகள் இருக்கின்றன. பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ உணர்வுகளும் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் மேலாக இலங்கையர் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்கின்றது. அந்த யுகம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் ஒரு மொழி, இனம், மதம் என்ற பிற்போக்குத் தன்மை ஒழிக்கப்பட்டு பல இனம், மொழி, மதம் என்ற முற்போக்கான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் தான் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பிக்கை நட்சத்திரமாக கருதுகின்றார்கள். அதனடிப்படையில் தான் 2015ஆம் ஆண்டு அவரை இந்த நாட்டின் தலைவராக தெரிவு செய்தார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து நல்லாட்சியை நடத்துகின்றது என்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை வழங்குவதற்காகவேயாகும். அதற்கான பாரிய பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg