Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களத்தை ஆண்ட வாரியர்ஸ்! – அதிர்ச்சியுடன் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்

In விளையாட்டு
Updated: 07:02 GMT, Sep 4, 2017 | Published: 07:02 GMT, Sep 4, 2017 |
0 Comments
1213
This post was written by : Puvanes

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தின் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர் கொள்ள களம் இறங்கிய தமிழ் தலைவாஸ் ஆரம்பத்தில் முன்னணி வகித்தது.

அதனைத் தொடர்ந்து விறுவிறுப்படைந்த போட்டியில் களத்தை ஆட்கொண்ட  வாரியர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 29-25 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக பெங்கால் வாரியர்ஸ் அணி 40 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.

இது வரை 8 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றியும் 1 போட்டியில் சமநிலையையும் பெற்றுள்ளதோடு, 6 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg