Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தொலைதூர இலக்கினை மின்னல் வேகத்தில் அடைந்த வீரர்!

In விளையாட்டு
Published: 08:23 GMT, Sep 4, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Puvanes
car001

இத்தாலி பார்முலா 1 சம்பியன்ஷிப் கார் பந்தயப் போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தை பெற்றார்.

இத்தாலி கிராண்ட்பிரியில் நடைபெற்ற நேற்றைய 13 ஆவது சுற்றுப் போட்டியில் நிர்ணயித்த இலக்கான 306.72 கிலோ மீட்டர் தூரத்தினை 1 மணித்தியாலம் 15 நிமிடம் 32.312 கடந்து வெற்றியடைந்துள்ளார்.

குறித்த போட்டித் தொடர் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இது வரை இந்தத் தொடரில் மொத்தமாக 6 வெற்றிகளை ஹாமில்டன் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டித் தொடரின் அடுத்த போட்டியானது எதிர்வரும் 17 ஆம் திகதி சிங்கப்பூர் நாட்டில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg