Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அமைதி பேரணி

In இலங்கை
Published: 08:59 GMT, Sep 4, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Varshini

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிராமிய பெண்கள் அமைப்பு, கிராம முகாமைத்துவ சம்மேளனம், சர்வமதக்குழுக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய இந்த அமைதி பேரணி, வவுனியா தபால் கந்தோர் வரை சென்றது.

பேரணியில் முடிவில் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம், கிராமிய பெண்கள் அமைப்பினர் மற்றும் சர்வமத குருக்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், இன்றுடன் 193 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்வையும் பெற்றுக்கொடுக்காததையடுத்து இன்று இந்த அமைதி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

missing persons (2) missing persons (1) missing persons (4) missing persons (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg