Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜாம்பவான்களைப் உருவாக்கிய இலங்கைக்கு பரிதாப நிலை ஏற்பட முக்கிய காரணங்கள்!

In கிாிக்கட்
Updated: 11:54 GMT, Sep 4, 2017 | Published: 10:49 GMT, Sep 4, 2017 |
1 Comment
3106
This post was written by : Puvanes

தனக்கென தனி இடத்தினைப் பிடித்து பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருந்த இலங்கை தற்போது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றது.

இலங்கை அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம், அரசியல் பிரச்சினைகள் உட்பட பல்வேறுபட்ட குழப்பங்களோடு, இலங்கை ரசிகர்களின் கொந்தளிப்பும் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு வருகின்றது.

இலங்கை அணி, தனது சொந்த மண்ணில் இந்தியாவுடன் மோதி வரலாற்றில் முதற் தடவையாக 5-0 என்ற கணக்கில் வெள்ளையடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியில் ஒரு நாள் தொடர் தோல்விக்கு முக்கிய காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அணியின் நம்பிக்கை, இலங்கையின் அவநம்பிக்கை இலங்கையின் தோல்விக்கு முக்கியமானதொரு காரணமாக கூறப்படுகின்றது. இலங்கை இந்தியாவுடன் மோதிய டெஸ்ட் தொடரில் 3-0 என இந்தியா வென்றது இலங்கையின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விட்டது.

அதேபோல, இலங்கை அணியில் மோசமான துடுப்பாட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றிய காரணம் எனக் கூறப்படுகின்றது.

டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒரு நாள் போட்டிகளிலும் சரி இலங்கை சிறப்பான துடுப்பெடுத்தாட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. இதனை இலங்கை அணியின் தலைவரும் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் வெற்றிக்கு அவர்களின் சிறப்பான பந்து வீச்சும் ஓர் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களும், சுழல் பந்து வீச்சாளர்களும் வெவ்வேறு தருணங்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்திய அணி வீரர்களது நிதானம் அவர்களது வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர்களை இழந்து இக்கட்டை சந்தித்த வேளை மத்திய வரிசையில் களம் இறங்கிய வீரர்கள் விக்கெட் இழப்பை தடுத்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி இலங்கையை வென்றனர்.

எனினும் இலங்கை அணியில் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களைத் தவிர துடுப்பாட்டத்தில் சிறப்பினை காட்டவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததும் இலங்கையில் தோல்விக்கு ஓர் காரணம்.

தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வந்த காரணத்தினால் உத்வேகம் குறைந்த நிலையில் இலங்கை அணி பந்து வீசிய காரணத்தினால் வெற்றி வாய்ப்பு கிட்டிய போதும் அதனை கைப்பற்ற வில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இலங்கை அணியில் சிறப்பான வீரர்கள் இருந்தாலும் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகமாக இடம் பிடித்தமையும் இலங்கை அணியின் தோல்விக்கு ஓர் முக்கிய காரணம் எனவும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

எனினும் இலங்கை அணி விட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் வளர்ச்சியடையும் என அணியின் முக்கிய வீரர்களும், முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. Razzak