Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் திகதிக்குள் உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்த உத்தரவு

In இந்தியா
Updated: 10:52 GMT, Sep 4, 2017 | Published: 10:52 GMT, Sep 4, 2017 |
0 Comments
1124
This post was written by : Arul Jesu

தமிழகத்தின் உள்ளாட்சி மன்ற தேர்தலை நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி மன்ற தேர்தல், தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, பாடம் நாராயணன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கால் பிற்போடப்பட்டது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் காட்டி இவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய இன்றைய தினம் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை, செப்டேம்பர் மாதம் 18 ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் தேர்தலை, நவம்பர் மாதம் 17 ஆம் திததிக்குள் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg