Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை இராணுவத்தின் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம்!

In இலங்கை
Published: 10:54 GMT, Sep 4, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Ravivarman
ad

இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 8ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இராணுவ மின்னேரியா காலாட்படை பயிற்சி முகாமில் 69 வெளிநாட்டு இராணுவத்தினரது பங்களிப்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானதுடன், குறித்த பயிற்சி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த பயற்சி நடவடிக்கைகளில் முழுமையாக 2675 பேர் பங்கேற்பதுடன், வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரும், இலங்கை இராணுவத்தின் காலாட்படையினர், கொமாண்டோ மற்றும் விஷேட அதிரடிப் படையினரும் ,இலங்கை கடற்படை, விமானப் படையினரும் பங்கேற்கின்றனர்.

கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, பிரிகேடியர் நிஷாந்த ஹேரத், பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா, பிரிகேடியர் உதித பண்டார, கேர்ணல் சந்திர ஜயவீர, கேர்ணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg