Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜேர்மனில் தேர்தல் – சூடான விவாதத்தில் பிரதான வேட்பாளர்கள்

In ஐரோப்பா
Updated: 11:16 GMT, Sep 4, 2017 | Published: 11:12 GMT, Sep 4, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Suganthini
ger

ஜேர்மனியில் கூட்டாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அந்நாட்டின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் சூடான விவாதத்தில் ஈடுபட்டனர்.

கன்சர்வேட்டிவ் கட்சி அதிபர் அஞ்சலா மெர்கல் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான மத்திய இடது சாரி கட்சி அதிபர் மார்ட்டின் ஷுல்ஸுமே சூடான விவாதத்தில் ஈடுபட்டனர்.

பேர்லின் நகரில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டுக் கொள்கை மற்றும் சமூக பொருளாதாரச் சிக்கல் விவகாரம் தொடர்பான திட்டங்கள் தொடர்பில் இந்த இரு வேட்பாளர்களும் முக்கியமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அத்துடன் அகதிகள் கொள்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள், பயங்கரவாதம் உள்ளிட்டவை தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், ஜேர்மனிக்கு தாக்குதல்களை மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படுகின்றவர்கள் மற்றும் குற்றவாளிகளை வெளியேற்றுவது தொடர்பிலும் இடது சாரி கட்சித் தலைவர் மார்ட்டின் ஷுல்ஸ் வாதிட்டுள்ளார்.

ஜேர்மனியில் இம்மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg