Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் வேலை வாய்ப்பு! – பெண் கைது

In கனடா
Published: 11:15 GMT, Sep 4, 2017 |
0 Comments
1239
This post was written by : Puvanes
canada_vacancy001

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்தும் பண மோசடியில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றின் பிரதான சந்தேக நபரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அனோமா எனப்படும் பெண் ஒருவரே இந்தக் குழுவின் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடனா நாட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு விசா வந்துள்ளதாக கூறி, அரசாங்க அதிகாரிகளைப் போல குறித்த பெண் தலைமையிலான குழு பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இவ்வாறான மோசடி குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg