Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் தீர்மானத்தால் உறவில் பாதிப்பு – ரஷ்யா

In ஐரோப்பா
Published: 11:47 GMT, Sep 4, 2017 |
0 Comments
1141
This post was written by : Suganthini
russia

அமெரிக்காவில் அமைந்துள்ள ரஷ்ய துணைத் தூதுவர் காரியாலயம் மற்றும் தூதரக இணை நிறுவனங்களை மூடுமாறு அமெரிக்காவால் எடுக்கப்பட்ட தீர்மானமானது, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிக்கு விழுந்த பாரிய அடியாகும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவொரு வெளிப்படையான விரோதச் செயல் என்று தாம் கருதுவதுடன், சர்வதேச சட்டத்தை வொஷிங்டன் மீறியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியுள்ளது.

இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்திருந்த துணைத் தூதுவர் காரியாலயம், வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் அமைந்திருந்த தூதரக இணை நிறுவனங்களை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து, அக்காரியாலயங்களில் பணியாற்றி வந்த தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையிலேயே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டவாறு கூறியுள்ளது.

ரஷ்யாவில் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றி வந்த அமெரிக்க இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கடந்த மாதம் ரஷ்யா அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் இந்தச் செயற்பாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg