Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் குறித்து முறையிடலாம்!

In இலங்கை
Published: 14:13 GMT, Sep 4, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Ravivarman
bus

கொழும்பு, கம்பஹா மற்றும், களுத்துறை மாவட்டங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் குறித்து பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்களை மாகாண போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமானால் இது குறித்து 011 – 5559595 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்கு பயணச்சீட்டுக்கள், மற்றும் சில நடத்துனர்கள் மிகுதி சில்லறைக் காசுகளை சரியாக வழங்காமை குறித்தும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு தெரிவிக்கலாம் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg