Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

In இலங்கை
Published: 02:26 GMT, Sep 5, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Puvanes

யுத்தம் என்ற பெயரில் தவறு செய்தவர்களைக் காப்பாற்றுவது மக்களுக்குச் செய்யப்படும் அநீதி என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், போர்க் காலத்தில் குற்றம் செய்தவர்களை தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனக் கூறிய அவர் நாட்டின் தலைவர்கள் மக்களுக்கு சார்பாகவே இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினை நான் காட்டிக் கொடுத்ததாக குறிப்பிடுகின்றார்கள், அப்படி காட்டிக் கொடுத்திருந்தால் யுத்தத்தினை எவ்வாறு நிறைவு செய்ய முடியும் எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த அணி சார்பில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மகிந்த தரப்பு அணியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் பொன்சேகா இராணுவத்துக்கு எதிராக முரண்பட்ட கருத்துகளை முன்வைத்த காரணத்தினாலேயே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாகவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg