Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 06:38 GMT, Sep 5, 2017 | Published: 02:49 GMT, Sep 5, 2017 |
0 Comments
1634
icon_com
This post was written by : Puvanes
polannaruwa001

பொலன்னறுவை மற்றும் கதுருவெல பகுதியில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக மின்கம்பங்கள் சரிவு, ஏற்பட்டுள்ளதோடு மண் சரிவினால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளிலும், நிவாரணம் வழங்கும் பணிகளிலும் நேற்று இரவு முதல் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் மழை பெய்யும் சமயம் கடும் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காலி, மாத்தறை மற்றும் சம்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் இன்று சீரற்ற காலநிலை ஏற்படக் கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg