Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கடற்படையின் கப்பல்கள் இந்தியா நோக்கி பயணம்

In இலங்கை
Published: 03:45 GMT, Sep 5, 2017 |
0 Comments
1369
icon_com
This post was written by : Puvanes
sagara001

சயுர மற்றும் சாகர எனப்படும் இலங்கை கடற்படையின் இரு கப்பல்கள் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இரு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு கடற்படை பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த பயிற்சியினை முன்னிட்டு நேற்றைய தினம், திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இலங்கைக் கப்பல்கள் நாளை விசாகப்பட்டணம் துறைமுகத்தினை சென்றடையும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கூட்டுப்பயிற்சியில் 368 பேர் இலங்கை கடற்படையின் சார்பில் பங்கு கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg