Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவக்கல்லூரியில் அனுமதி கோரி தமிழக மாணவி மனுத்தாக்கல்

In இந்தியா
Updated: 04:04 GMT, Sep 5, 2017 | Published: 04:04 GMT, Sep 5, 2017 |
0 Comments
1248
This post was written by : Elakkiya

நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத தமிழக மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் அனுமதி வழங்க வேண்டும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அமுலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த திருமா மகள் என்ற மாணவியே இவ்வாறு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி உரிய மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கு தகுதி அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறித்த மாணவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீட் தேர்வில் 373 மதிப்பெண்களை பெற்று 1,138 ஆவது இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள போதிலும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோவதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு எதிர்வரும் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg