Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வாயால் வாய்ப்பை இழந்த நாயகி

In கிசு கிசு
Published: 05:44 GMT, Sep 5, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Varothayan
tamanna-bhatia-in-kaththi-sandai-003

இந்தியாவின் பிரமாண்ட படத்தில் நடித்த நாயகிக்கு, அப்படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லையாம். இந்தக் கடுப்பில், ‘இனி இந்தி படங்களில் தான் கவனம் செலுத்தப்போகிறேன்’ என்று அவர் கூறியதாக ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்த தகவலை அடுத்து தமிழில் படங்கள் ஒன்றிரண்டு வந்தாலும் தெலுங்கு படவுலகினர் அவரை கைவிட்டு விட்டார்களாம். இந்தியை நம்பிச் சென்ற நிலையில் அங்கும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. ‘இதென்னடா வம்பா போச்சேன்’னு திகிலான நாயகி, நான் அப்படியொரு பேட்டியே கொடுக்கவில்லை என்று அந்தர் பல்டியடித்தார். அது அவருக்கு மீண்டும் 2 படங்களை தெலுங்கில் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும், புதிய படத்தில் குத்துபாடல் ஆட வாய்ப்பு வந்தது. பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் இவர்களிடம் முரண்டுபிடித்தால் மறுபடியும் நட்டாற்றில் விட்டுவிடுவார்கள் என்று கணக்கு போட்டவர் குத்துபாடல் ஆட ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பளம் தாராளமாக தரவேண்டும் என்று நிபந்தனை போட்டார்.

அதற்கு தயாரிப்பாளர்கள், ‘நீங்க வந்து ஒரு குத்து போட்டா போதும் கேட்ட சம்பளம் தருகிறோம்’ என்று பேசி முடித்துவிட்டார்கள். தற்போது நாயகிக்கு சிக்கான கவர்ச்சி உடைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. அடுத்த வாரம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். இந்தக் குத்தாட்டத்திற்கு பிறகு அம்மணி மீண்டும் தமிழ், தெலுங்கில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg