Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிதி மோசடி – குவாத்தமாலா ஜனாதிபதியிடம் விசாரணை

In உலகம்
Published: 06:02 GMT, Sep 5, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Suganthini

குவாத்தமாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தவறான முறையில் நிதி பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை, குவாத்தமாலா அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) வழங்கியுள்ளது.

800,000 அமெரிக்க டொலர் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ் மறுத்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது, தவறான முறையில் நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குவாத்தமாலா ஜனாதிபதியிடம் விசாரணை செய்வதற்கு கடந்த மாதம் முயன்றதாக குவாத்தமாலா சட்ட மா அதிபர் மற்றும் ஐ.நா. ஆதரவு பெற்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இவரை ஆட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான காங்கிரஸே இறுதியாக அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதியான ஓட்டோ பெரேஸ் பாரிய ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், குவாத்தமாலாவில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஜிம்மி மொரலெஸ் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg