Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிங்களவர்களுக்கு வீடு கொடுக்காததால் வடக்கு ஆளுநர் ஆத்திரம்!

In இலங்கை
Updated: 11:38 GMT, Sep 5, 2017 | Published: 06:37 GMT, Sep 5, 2017 |
0 Comments
1641
icon_com
This post was written by : Varshini
Untitled-490

முல்லைத்தீவு – முகத்துவாரம் பகுதியில் கொட்டகை அமைத்து வசிக்கும் சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாமைக்கான காரணம் குறித்த விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரி ஆகியோரை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆளுநர் செயலகத்திற்கு வருமாறு குரே அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் காணிகளில், கடந்த பிரேமதாச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு அவை சிங்கள குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன. போரின் உக்கிரம் காரணமாக பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்த இச் சிங்கள குடும்பங்கள், தற்போது 267 குடும்பங்களாக பெருகி, மீண்டும் முல்லைத்தீவை நோக்கி படையெடுத்துள்ளன.

தற்போது, தற்காலிக கொட்டகைகளை அமைத்து இம்மக்கள் அங்கு வசித்து வருவதோடு, தனிவீடுகளை அமைத்துத் தருமாறும் கோருகின்றனர். இது தொடர்பில் ஆளுநரிடம் அண்மையில் மனுவொன்றும் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகளை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg