Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைக்கு வந்தது தலை பாகையுடன் தப்பியது

In கிாிக்கட்
Updated: 07:11 GMT, Sep 5, 2017 | Published: 06:59 GMT, Sep 5, 2017 |
0 Comments
1697
This post was written by : Arul Jesu

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பேருந்து மீது கல் ஒன்று மோதியுள்ளது.

இதனால் வீரர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் பேருந்தின் கண்ணாடி ஒன்று மாத்தரமே உடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

எவ்வாறாயினும் வீரரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தமது திருப்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கிகிக்கெட் விற்பனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிட்டகொங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பங்ளாதேஸ் அணி தமது முதலாவது இனிங்சுக்காக 305 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சில் தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அவுஸ்திரேலிய அணி பங்களாதேசிற்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது, இதற்கமைய முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஸ் அணி வெற்றிப் பெற்றமை குறிப்பிடதக்கது.

Austest 2 Austest 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg