Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செயற்கையாக அமைக்கப்படும் கன்னக் குழி ஆபத்தானதா?

In
Updated: 07:22 GMT, Sep 5, 2017 | Published: 07:22 GMT, Sep 5, 2017 |
0 Comments
1247
This post was written by : Kemasiya

பெண்களோ, ஆண்களோ முகத்தில் குழி  விழும் பொழுது பார்க்க அழகாகவே திகழ்வார்கள். இவர்களை பார்ப்பவர்கள் தமக்கு இவ்வாறு குழி இல்லையே என கவலைப்படுவார்கள்.

அவ்வாறு கவலைப்படுபவர்களுக்கு தான் தற்காலத்தில் செற்கையாகவே வைத்தியர்களால் கன்னத்தில் அழகுக்குழி அமைக்கப்படுகிறது. இயற்கையான கன்னக் குழிகளில் இருவகை இருக்கிறது. ஒன்று பேசும் போதும் சிரிக்கும்போதும் மட்டுமே வெளிப்படும் குழி. இரண்டாவது எப்போதும் பளிச்சென  தெரியும் குழி. பொதுவாக பெண்களுக்கு இயற்கையாக கன்னத்திலும் தாடையிலும் குழி விழுவதுண்டு.

கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?

கன்னங்களின் தசைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் குழிவிழுவதற்கான காரணம். முகத்தில் ‘ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர்’ என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடிமனாலோ தொடர் தசையில் ஏற்படும் பிளவாலோ குழி உருவாகிறது. முகத்தில் சேரும் கொழுப்பும் கன்னக் குழிக்கு காரணமாகிறது. ஆனால் கொழுப்பு குறையும்போது அது மறைந்துவிடும். இளமையில் குழி அழகோடு தோன்றினாலும் வயதாகும்போது அது காணாமல் போவது இதனால் தான்.

இயற்கையாக குழி இல்லாதவர்கள் செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம். இது நவீன அழகு சிகிச்சையாகும். லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து 20 நிமிடங்களில் குழியை உருவாக்கிவிடுகிறார்கள்.

முகத் தசையின் பலம் அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு முகத்தின் அமைப்பு உடலின் அமைப்பு போன்ற பல விடயங்களை கருத்தில்கொண்டு குழியை உருவாக்குகிறார்கள்.

ஆபரேஷன் முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி பின்பு சிரிக்கும்போதும் பேசும்போதும் மட்டும் தெரியும்.

சரி.. செயற்கை குழி அழகாக இல்லாவிட்டால் குழியை மூடிவிடலாமா? அதற்கு எளிதான இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறப்புடுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg