Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொடுகுத் தெல்லைக்கு சிறந்த மருந்து

In
Published: 07:38 GMT, Sep 5, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Kemasiya
dehtjht6rur4

பெண்களுக்கு ஏற்படும் பொடுகுத் தொல்லை முடி உதிர்வின் முக்கிய பங்காளியாகின்றது. அத்துடன் பேன் தொல்லையிலும் அதிகமாக பொடுகுத் தொல்லையினால் ஏற்படும் தலை அரிப்பு வலி காணப்படும். மேலும் பொடுகு அதிகரித்தால் தலை மொட்டை விழுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். ஆகவே பொடுகு வந்துவிட்டால் ஆரம்பித்திலேயே போக்காட்விடுவது தான் சிறந்த வழி. எனவே வீட்டிலேயே இயற்கையான முறையில் பொடுகை விரட்டுவது எப்படியென பார்க்கலாம்.

இதற்கு இலகுவாக கிடைக்கும் மருந்துகளில் ஒன்று வெங்காயச் சாறு. இதன் பயன்பாடு பொடுகை போக்குவதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

1.புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.

2.பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

3. பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

4.அப்பிள் மற்றும் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.

5.கற்றாழை சதைப் பகுதியுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.

6.இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் சின்ன வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

இவ்வாறு  ஏதேனும் ஒரு முறையை தொடர்ந்து செய்து வந்தால்   ஒரே மாதத்தில்   சிறந்த பலனை அனுபவித்திடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg