Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மனித குலத்திற்கு எதிரான கொடூரம்! – கொடுமையை எதிர்த்து எழுப்பப்பட்ட குரல்

In இலங்கை
Published: 08:02 GMT, Sep 5, 2017 |
0 Comments
1282
icon_com
This post was written by : Puvanes

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் நடைபெற்று வரும் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னாரில் சனநாயக போராட்டம் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற மிருகத்தனமான செயற்பாட்டை வண்மையாக கண்டித்தும், இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்தும், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

protest001 protest002 protest003 protest004 protest005

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg