Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பழனிசாமியே முதல்வராக தொடர்வார்: சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

In இந்தியா
Published: 08:44 GMT, Sep 5, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Elakkiya
edapadi_3154084f

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே தொடரவேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே தொடருவார் என்றும் அவருடைய முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தபோது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று கோரி டிடிவி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரிடம் அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் அதற்கு பதிலடியாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமாயின் 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டும். எனினும் தற்போது இடம்பெற்ற அதிமுக கூட்டத்தில் 110 சட்டமன்ற உறுப்பினர்களே பங்கேற்றிருந்தை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg