Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இத்தாலி போர்முலா வன் கார்பந்தயத்தில் லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்

In விளையாட்டு
Published: 09:46 GMT, Sep 5, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Arul Jesu
lewis-hamilton - 1

இத்தாலி போர்முலா வன் கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 1 மணித்தியாலம் 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இதன் 13 ஆவது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 1 மணித்தியாலம் 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை பெற்றுக் கொண்டார்.

இந்த பருவகாலத்தில் லீவிஸ் ஹெமில்டன் பதிவு செய்த ஆறாவது வெற்றியாக இது பதிவாகியது.

இதேவேளை இந்த போட்டியில் பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் இரண்டாவது இடத்தையும், ஜெர்மனியின் செபஸ்டியன் விட்டேல் மூன்றாவது இடத்தையும் தனதாக்கி கொண்டனர்.

அடுத்த போட்டி சிங்கப்பூரில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

lewis-hamilton-2 lewis-hamilton-3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg