Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பொருளாதாரக் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும் – சீனா

In உலகம்
Published: 10:33 GMT, Sep 5, 2017 |
0 Comments
1109
This post was written by : Suganthini

உலக பொருளாதாரக் கட்டமைப்பை சரி செய்வதன் மூலம் சலுகைகளைப் பெற்று முன்னேற்றமடைவதற்கு ஒத்துழைக்குமாறு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், வளர்ந்துவரும் நாடுகளுடன் விரிவான உறவைப் பேணுவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாடு சீனாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், பொதுவான தீர்வுகளைக் காண்பதற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.

முன்னெடுக்கப்படவுள்ள நிலையான அபிவிருத்திச் செயற்பாடுகளில் நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. அத்துடன் தொழில்நுட்பம் மற்றும்

விஞ்ஞானம், கல்வி, கைத்தொழில், உட்கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg