Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சென்றவர்கள் திரும்பவில்லை! – தெய்வத்தின் சந்நிதியில் உறவுகள்

In இலங்கை
Published: 10:38 GMT, Sep 5, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Puvanes

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் 27 வது நினைவு நிகழ்வு இன்று ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

குறித்த ஆண்டு, செப்டெம்பர் 5 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையிலும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வருடாந்தம் நினைவு நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.

காணாமல்போன உறவினர்களின் நினைவுக் குழுவின் சார்பில் அதன் ஏற்பாட்டாளர்கள், அரியமலர் தலைமையில், பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இ. கோபாலசிங்கம் சிவாச்சாரியார் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தினார்.

batti001 batti002 batti004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg