Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னைநாதர் மகோற்சவத்தில் டி.எம்.சுவாமிநாதன்!

In ஆன்மீகம்
Published: 12:20 GMT, Sep 5, 2017 |
0 Comments
1384
This post was written by : Varshini
munneswaram chariot festival (2)

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர், பரிவார மூர்த்திகளுடன் பஞ்ச இரதங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அரோஹரா கோஷத்துடன் அடியார்கள் வடம் பிடித்து இழுக்க, நகரைச் சுற்றி பஞ்ச இரதங்களும் பவனி வந்தன.

இதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அத்தோடு, இந்துசமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான முன்னேஸ்வரத்தின் மகோற்சவம், நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

munneswaram chariot festival (6) munneswaram chariot festival (1) munneswaram chariot festival (4) munneswaram chariot festival (2) munneswaram chariot festival (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg