Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜய்யுடன் தீபாவளிக்கு களமிறங்கும் விஜய் சேதுபதி!

In சினிமா
Updated: 14:01 GMT, Sep 5, 2017 | Published: 12:45 GMT, Sep 5, 2017 |
0 Comments
1348
icon_com
This post was written by : Varothayan
Vijay

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர இருக்கின்றது ‘மெர்சல்’. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது தான்.

ஏற்கனவே, மெர்சல் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ள நிலையில், படத்தையும் மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வரவேற்க காத்திருக்கின்றனர்.

இதேவேளை, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ வசூலில் சக்கை போடு போட்டுள்ள நிலையில், தற்போது அவர் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதைத் தொடர்ந்து மற்றுமொரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

படத்தின் பெயர் ‘ஜூங்கா’. அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg