Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

In இலங்கை
Published: 14:18 GMT, Sep 5, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Ravivarman

ஆசியாவில் மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் தாமரைக் கோபுரத்தின் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் பார்வையிட்டார்.

நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, பணிகளில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்து திட்டத்தை வினைத்திறனாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

குறித்த கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையும் போது கோபுரத்தின் உயரம் இடிதாங்கியுடன் 350 மீற்றர் ஆக அமையும். இக்கட்டடத்தில் ஆடம்பர கடைத் தொகுதிகள், உணவகங்கள், விழா மண்டபங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பெலவத்த, அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டடத் தொகுதியினையும் பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg