Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:00 GMT, Sep 5, 2017 |
0 Comments
1417
icon_com
This post was written by : Sivaguru Siva
Kids-at-DACA-rally

அமெரிக்காவில் சட்டபூர்வகுடியேற்ற ஆவணங்களற்றவகையில் தங்கியுள்ள  பராயமடையாத இளையோரை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது

அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செசன்ஸ் இன்று இதனை அறிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பராக் ஒபாமாவின்  பதவிக்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தால் லத்தீன் அமெரிக்க சிறார்கள் உட்பட சுமார் எட்டு லட்சம் இளையோர் நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.

அத்துடன் அமெரிக்காவில் கல்வி கற்கவும் வேலைவாய்ப்புக்களைப் பெறவும் அவர்கள் அனுமதிக்கபட்டிருந்தனர். இப்போது இந்த திட்டம் ஜனாதிபதி டொனால்ட்ரம்பினால் கைவிடப்பட்டுள்ளது.

_97672538_041467561afp

மியான்மாரில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அஞ்சி; பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சா ஏதிலிகள் தற்போது பங்களாதேசுக்குள் நுழைந்துவரும்நிலையில் ரொஹிஞ்சா ஏதிலிகளின் சுமையை தம்மால் தாங்கமுடியாதென பங்களாதேஸ் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இதனால் பங்களாதேசுக்குள் நுழைந்த ரொஹிஞ்சா ஏதிலிகளை மீண்டும் மியன்மார் ஏற்கும்படி உலகநாடுகள் மியான்மாருக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை ரொஹிஞ்சா பிரச்சனையை மையப்படுத்தி துருக்கி மாலைதீவு இந்தோனேசியா மலேசியா பாகிஸ்தான் ஆகியன நாடுகள் மியன்மாருடனான வணிக உறவுகளை துண்டித்துள்ளன.

_97671142_hurricane_irma_05.09.17_624

அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவாகிய ஐர்மா என்ற புயல் அதிதீவிர அபாயகரமான வலுவுடன் நகர்ந்து வருகிறது.

ஐர்மா வின் அதிதீவிரம் காரணமாக அதற்கு புயல்சின்னங்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச ஐந்தாம் இடம்வழங்கப்பட்டள்ளது

கரீபிய நாடுகளை தாக்கிய பின்னர் எதிர்வரும் ஞாயிறு அன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ஐர்மா தாக்குமென எதிர்பார்க்கபடுவதால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அன்மையில் வீசிய ஹார்வி புயல் அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில்  பெரும் அழிவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

_97673477_ae0c2551-1625-4f65-a38e-f960852c09f5

தமது மருமகளுக்கு அடிப்பதற்காக இந்தியாவிலிருந்து சுமார் எண்ணாயிரம் மைல்கள் பறந்து சென்ற இந்தியத்தம்பதி இப்போது அமெரிக்காவில் தமது மகனுடன் சேர்த்து கைது செய்யபட்டுள்ளனர்.

தமது புதல்வனின் மனைவிக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற ஆத்திரத்தடன் இவர்கள் இருவரும் பஞ்சாப்பிலிருந்து புளோரிடாவுக்கு விமானத்தில் பயணித்ததாவும் அதன்பின்னர் மருமகளுக்கு அடித்ததாகவும் தெரியவருகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg